Tuesday, September 3, 2013

ஸ்ரீ காட்சிநாதர் கலியுகத்தில் ஓர் அதிசயம்.


சிவமயம்


இறையன்பு  கொண்ட அன்பர்களே  இப்  பூவுலகில் எத்தனையோ திருவிளையாடல்களையும் , அதிசயங்களையும்  நிகழ்த்தி  இந்த மானிட பிறவியில் நம்மை இன்புற்று  வாழ ஒளி  கொடுத்து  வழிகாட்டிய பரமன் இந்த பிரபஞ்சத்தையே பாதுகாக்கும் பரம் பொருளாய் பிரவேசிக்கும் சிவபெருமான் இந்த நூற்றாண்டில் இன்னும் ஒரு திருவிளையாடலை நிகழ்த்தி இருக்கின்றார்.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம் கும்பகோணம் அருகில் உள்ள மேலவிடயல் ஊராட்சியில் திருகடுவாய் கறை தென்புத்தூர் (எ ) ஆண்டான்கோவில் என்ற அழகிய கிராமம் அமைந்துள்ளது. சுற்றி பார்க்கும் இடமெலாம் பச்சை பசேல் வயல்வெளிக்கு மத்தியில் பரந்து  விரிந்த திடல் உள்ளது. பண்டை காலம் முத்த இது லிங்க திடல் என்றே அனைவராலும் அழைக்கப்பட்டது. இங்குதான் அந்த அதிசயம் நடந்தது, ஆண்டான்கோவிலை  அடுத்துள்ள வலங்கைமானில் வசிக்கும் ஒரு சிவத் தொண்டனுக்கு இவ்விடத்தில் நான் புதையுண்டு கிடக்கிறேன் என்றும் என்னை மீட்டெடுத்து  பூமியின் மேல் வை என்றும்  ஒரு கனவாக பலமுறை அழுத்தியது. அத்தொண்டரோ இடமறியாமல் மீண்டும் சிவனை வேண்டி வழியும் கண்டறிந்தார். அவ்விடம் அதொண்டனின் பூர்விகமாக இருந்தது.




சிவதொன்டர்கள், இறைஉள்ளம் கொண்டவர்கள், சிவனடியார்கள் மற்றும் அரசு அலுவலர்கள் முன்னிலையில் இயந்திரம் கொண்டு கணவில் கண்ட இடத்தினை தோண்டும்போது சுமார் 5 1/2 அடி ஆழத்தில் கனவில் கண்ட, நமையெல்லாம் ஆட்கொண்ட ஆண்டவன் லிங்க ரூபத்தில் கண்டு நெஞ்சம் நெகிழ்ந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம். கனவா நிஜமா என்று வியந்து செய்வதறியாது திகைப்பும் மகிழ்ச்சியும் போங்க இறைவனை கண்டு வணங்கி மகிழ்ந்தோம்.

நன்கு அடி சுற்றளவுள்ள லிங்க திருமேனி கிடைத்த மகிழ்ச்சியோடு எல்லையை அடைந்தோம். புதைந்து இருந்தது லிங்க திருமேனி மட்டுமல்ல, அவருடன் சேர்ந்து ஆலயமே புதைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி கொண்டோம். அப்போதுதான் புரிந்தது போதுமான பொருளாதாரம் இல்லாமல் ஆலய திருப்பணி ஒரு பகுதியை மட்டும் கட்டிவிட்டு, கைவிடப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

ஆலயம் காத்த அந்த லிங்க திருமேனியை மேற்பரப்பிற்கு கொண்டுவந்து சிறிய கொட்டகை அமைத்து எங்கள் பகுதி மக்கள் அனைவரும் எத்தனையோ காலங்கள் மண்ணில் புதைந்து இன்று என்ன திருவிளையாடல் நிகழ்த்த இப்போது பூமியில்  வந்துள்ளாயோ ஈசா என்று  வழிபட்டு வருகின்றனர். இப்போது சிறப்பு பூஜைகளும் கிராம மக்களாலும் சிவனடியார்களாலும் தடையின்றி நடைபெற்று வருகிறது.



இச்செய்தி பரவி, அப்பகுதியின் மிகப்பெரிய மகான் நவகிரகத்தின் முதல் கிரகமான சூரியனின் ஸ்தலமான சூரியனார் கோவில் ஆதீனம்,  ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க பிரம்மச்சரிய சுவாமிகள், திருப்பரங்குன்றம் சிவத்திரு செளந்திரராஜன்  சுவாமிகள், திருக்கோவிலூர் பூமிநாத சுவாமிகள், கயிலை மாமுனிவர் சிவ காளிமுத்து அடிகளார் இன்னும் எத்தனையோ மகான்கள் வந்தவண்ணமே உள்ளனர்






தற்போது இப்பகுதி மக்களின் ஒரே எண்ணம் கனவில் வந்து காட்சி தந்த ஸ்ரீ காட்சிநாதர் என திருநாமமிட்டு அவருக்கு ஒரு அழகிய ஆலயம் அமைக்க வேண்டும் என்பதுதான். ஸ்ரீ காட்சிநாதர் லிங்க திருமேனி சுமார் 1500 முதல் 2000 ஆண்டுகளுக்கு  முற்ப்பட்டது என்று தொல்பொருள் ஆய்வர்கள் தெரிவித்துள்ளனர்.



நமைக்காக்கும் ஈசனுக்கொர் ஆலயம் அமைப்போம்.

ஈசனின் இந்த அதிசயத்தை உங்களுக்கு தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைக்றேன்.

திருச்சிற்றம்பலம்

சிவாய நம

நன்றியுடன்,
நடராஜன்,